மெக்சிகோ உள்ளிட்ட மத்திய அமெரிக்க நாடுகளிலிருந்து அமெரிக்காவிற்குள் நுழைவதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் ஊர்வலமாக நடைப்பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். முன்னர் இவர்களை மெக்சிகோ அதிகாரிகள் மெக்சிகோ மற்றும் கௌதாமாலாவிற்கிடையே உள்ள எல்லை பாலம் அருகே தடுத்து நிறுத்த முயற்சித்த போதும் அவர்களில் சிலர் சட்டத்திற்கு முரணாக படகுகள் மூலம் தப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்களில் பெரும்பாலானவர்கள் மத்திய அமெரிக்க நாடான கொண்டிரஸ் நாட்டை சேர்ந்தவர்கள் எனவும் வறுமை மற்றும் வன்முறை போன்றவற்றிலிருந்து தப்பிப்பதற்காகவே அமெரிக்காவிற்குள் செல்ல முயல்வதாக அவர்கள் தெரிவிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 2000 குடியேறிகள் இந்த பயணத்தில் இருப்பதாக அசோஸியேடட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடதத்க்கது