அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிஸன் ( Scott Morrison) பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாகிய குழந்தைகளிடம் தேசிய மன்னிப்பு கோரியுள்ளார். அவுஸ்திரேலியாவில் ஆயிரக்கணக்கானோர் குழந்தை பருவத்தில் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாகியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது சுமார் 8000 பேர் பாடசாலை , விளையாட்டு மன்றம் மற்றும் தேவாலயம் ஆகிய இடங்களில் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாகியது தொடர்பாக சாட்சியமளித்தனர்.
ஐந்து ஆண்டுகளாக நடைபெற்றுவந்த விசாரணை கடந்த வருடம் டிசம்பர் மாதம் முடிவுக்கு வந்திருந்த நிலையிலேயே பிரதமர் இவ்வாறு தேசிய மன்னிப்புக் கோரியுள்ளார்.
இன்று திங்கட்கிழமை அவர் ஆற்றிய நாடாளுமன்ற உரையை கேட்பதற்காக நூற்றுக்கணக்கான மக்கள் கூடியிருந்தவேளையில் ஆற்றிய உரையின் போதே பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான குழந்தைகளிடம் அவுஸ்திரேலிய பிரதமர் தேசிய மன்னிப்பு கோரியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது