நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை ( கனடா நேரம் ) கனடாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் அதன் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து பிரதிபலித்துக் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கனடாவின் டோபினோவின் மேற்கிலிருந்து 149 மைல்கள் தொலைவில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கத்தின் தாக்கம் உணரப்பட்டுள்ளது.
பிரிட்டிஷ் கொலம்பியாவின் வன்கூவர் தீவில் உள்ள சிறிய நகராட்சியான போர்ட் ஹார்ட்டியின் தென்மேற்கில் 135 மைல் தொலைவிலும் சீட்டல் நகரின் வடமேற்கில் 355 மைல் தொலைவிலும் நேற்று இரவு 10.39 மணியளவிலும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது
அடுத்த அரை மணிநேரத்தில் கனடியன் நகரத்திலிருந்து 122 மைலிலிருந்து சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று 6.8 ரிக்டர் அளவுகோலிலும் அதற்கடுத்து ஆறு நிமிடங்கள் கடந்து போர்ட் ஹார்டியின் தென்மேற்கே 138 தொலைவில் 6.5 ரிக்டர் அளவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்து, 14 நிமிடங்களுக்குப் பின்னர் அதே இடத்தில் மிதமான நிலநடுக்கம் 4.9 அளவில் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்நிலநடுக்கங்கள் தொடர்பாக சேதம் அல்லது காயங்கள் பற்றிய ஆரம்ப அறிக்கைகள் இன்னும் வெளியிடப்படவில்லை என்பதுடன் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது