கொக்குவில் நந்தாவில் அம்மன் ஆலயப் பகுதியில் கஞ்சா தூள் கலந்த பீடிகளை வைத்திருந்த மூன்று இளைஞர்களை ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட சிறப்பு அதிரடிப் படையினர் கைது செய்து யாழ்ப்பாணம் காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
வாள்வெட்டு வன்முறையில் ஈடுபடும் கும்பல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் சிறப்பு அதிரடிப்படையினர் சுற்றுக்காவல் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ள நிலையில் கொக்குவில் நந்தாவில் அம்மன் ஆலயப் பகுதியில் திங்கட்கிழமை(22)அந்தப் பகுதியில் சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த மூன்று இளைஞர்களை விசாரணைக்குட்படுத்தியுள்ளனர்.
அதன்போது அவர்களிடமிருந்து சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சிறப்பு அதிரடிப் படையினரால் பீடிகள் சில மீட்கப்பட்டன. அவற்றில் கஞ்சா போதைப்பொருள் தூள் கலந்திருந்தன. இதனால் குறித்த இளைஞர்கள் மூவரும் கைது செய்யப்பட்டு காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்படடுள்ளனர்.
இவ்வாறு கைதாகிய இளைஞர்கள் மல்லாகம் தாவடி கொக்குவில் பகுதியை சேர்ந்த 21 வயதக்கும் 27 வயதுக்கும் உட்பட்ட இளைஞர்கள் ஆவர்.சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
பாறுக் ஷிஹான்-