நைஜீரியாவில், போர்னோ மாநிலத்தின் சந்தைப்பகுதி ஒன்றில் இரண்டு குண்டு வெடிப்புகள் இடம்பெற்றுள்ளது என நைஜீரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குண்டு வெடிப்பை நிகழ்த்திய சிறுமிகளுக்கு 7 அல்லது 8 வயது இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குண்டுவெடிப்பில் குண்டு வைத்த சிறுமிகள் உட்பட மூவர் உயிரிழந்ததாகவும் 17 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சிறுமிகள் ரிக்ஷாவை விட்டு இறங்கி; சந்தையில் இருக்கும் கடைகள் அருகே சென்று வெடிகுண்டை வெடிக்கச் செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலுக்கு யாரும் பொறுப்பேற்கவில்லை என்ற போதிலும் ஆனால் போகோ ஹரம் அமைப்பு பெண்களையும் குழந்தைகளையும், வெடிகுண்டு தாக்குதலுக்கு அதிகமாக பயன்படுத்தி வருகிறது என குற்றம் சுமத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.