172
பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் 8 மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக, சபாநாயகர் கரு ஜயசூரிய பாராளுமன்றத்தில் இன்றையதினம் அறிவித்துள்ளார். இன்றைய சபை அமர்வு இன்று முற்பகல் 10. மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட போது, சபாநாயகரின் அறிவிப்புகளினை வெளியிட்ட போதே அவர் இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.
மேலும் இழப்பீடுகளுக்கான எதிரீடுகள் சட்டமூலத்திற்கு தாம் கையொப்பமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள சபாநாயகர்; இவற்றின் பிரதிகள் பாராளுமன்றத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
Spread the love