உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட ஆணையாளர் நாயகத்துக்கு திணைக்களத்தின் ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இன்று (25.10.18) பகல் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு முன்னால் ஊழியர்கள் எதிர்ப்பில் ஈடுபட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆணையாளர் நாயகம் பதவிக்கு மத்திய வங்கியின் முன்னாள் அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டமைக்கு எதிராக இந்த எதிர்ப்பு நடவடிக்கை ஒழுங்கு செய்யப்பட்டதாக உள்நாட்டு இறைவரிச் சேவை சங்கத்தின் செயலாளர் அஜித் புஷ்பகுமார கூறினார்.
உள்நாட்டு இறைவரித் திணைக்கள யாப்பின்படி ஆணையாளர் நாயகம் பதவிக்கு தகுதியான ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என்ற போதிலும் அதனை மீறி இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.