Home பிரதான செய்திகள்உலக டென்னிஸ் தொடர் – பிளிஸ்கோவா – ஸ்விடோலினா அரையிறுதிக்கு முன்னேற்றம்

உலக டென்னிஸ் தொடர் – பிளிஸ்கோவா – ஸ்விடோலினா அரையிறுதிக்கு முன்னேற்றம்

by admin

svitolina
சிங்கப்பூரில் நடைபெற்றுவரும் எட்டு முன்னணி வீராங்கனைகள் பங்கேற்கும் உலக டென்னிஸ் தொடரில் பிளிஸ்கோவா மற்றும் ஸ்விடோலினா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர். நேற்றையதினம் நடைபெற்ற வைட் பிரிவில் கடைசி கட்ட லீக் போட்டியில் செக்குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா அதே நாட்டைச் சேர்ந்த பெட்ரா கிவிடோவாவை 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வென்றுள்ளார்

மற்றொரு போட்டியில் நடப்பு சம்பியனான டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கி உக்ரைனின் எலினா ஸ்விடோலினாவுடன் போட்டியிட்ட நிலையில் ஸ்விடோலினா 5-7, 7-5, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரைஇறுதிக்கு முன்னேறியுள்ளார்.

அதேவேளை ரெட் பிரிவில் இன்று நடக்கும் லீக் போட்டிகளில் ஜப்பானின் ஒசாகா நெதர்லாந்தின் கிகி பெர்டென்சுடனும் ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர் அமெரிக்காவின் ஸ்லோனே ஸ்டீபன்சுடனும் போட்டியிடவுள்ளனர்.

Pliskova

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More