ஹொங்கொங்கில் நிரவ் மோடிக்கு சொந்தமாக உள்ள சுமார் 255 கோடி ரூபா பெறுமதியான சொத்துக்களை அமுலாக்கத்துறை தற்போது முடக்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பஞ்சாப் நஷனல் வங்கியில் சுமார் 11,400 கோடி ரூபாய் பணத்தினை கடனாக பெற்று விட்டு மோசடியினை மேற்கொண்டு விட்டு வெளிநாட்டுக்கு தப்பிச்சென்ற பிரபல வைர வியாபாரியான நிரவ் மோடிதலைமறைவாக வசித்து வருகின்றார். இந்த வங்கி மோசடி தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்து வரும் நிலையில், அமுலாக்கத்துறையும் நிதி மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது.
இந்த வழக்கில் நிரவ் மோடியின் சொத்துகள் தொடர்ந்து முடக்கப்பட்டு வருகின்ற நிலையில் ஹொங்கொங்கில் நிரவ் மோடிக்கு சொந்தமாக இருக்கும் விலை உயர்ந்த பொருட்கள், வைர நகைகள் உள்ளிட்ட சுமார் 255 கோடி ரூபா பெறுமதியான சொத்துக்களை அமுலாக்கத்துறை தற்போது முடக்கி உள்ளது. இவற்றை முடக்கி இருப்பதற்கான உரிய உத்தரவு நகலை விரைவில் ஹொங்கொங் அதிகாரிகளுக்கு அமுலாக்கத்துறை அனுப்பி வைக்கும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.