161
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பிரதமராக பதவி ஏற்றதும் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் இராணுவத்தினரும் மஹிந்த ராஜபக்சவிற்கு கடந்த காலத்தில் ஆதரவு வழங்கிய அரசியல் கட்சிகளும் வெடி கொளுத்தி கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை கிளிநொச்சியில் உள்ள சில இராணுவ முகாம்களில் இராணுவத்தினர் வெடி கொளுத்தி கொண்டாத்தில் ஈடுபட்டனர். அத்துடன் யாழ்ப்பாணத்திலும் இராணுவத்தினர் சிலரும் இராணுவ முகாங்களிலும் வெடி கொளுத்தி கொண்டாட்டத்தில் ஈடுபட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிடுகின்றார்.
இதேவேளை மகிந்த ராஜபக்சவிற்கு கடந்த காலத்தில் ஆதரவு வழங்கிய முன்னாள் அமைச்சர் ஒருவரது அலுவலகத்திலும் கட்சியின் ஆதரவாளர்கள் வெடி கொளுத்தி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் அங்கம் வகித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரது கரைச்சி பிரதேச சபை உறுப்பினர்கள் சிலரும் கிளிநொச்சி நகரில் வெடி கொளுத்தி கொண்டாத்தில் ஈடுபட்டனர்.
இதேவேளை வவுனியாவில் சிறிரேலோ கட்சி அலுவலத்திலும் வெடி கொளுத்தி மகிழ்ச்சி வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மகிந்த ராஜபக்சவை ஆதரித்து அக் கட்சியின் தலைவர் உதயகுமார் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார். இதேவேளை திருகோணமலை நகரத்தில் நேற்றிரவு முழவதும் பெரும்பான்மையின மக்கள் மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மகிந்த ராஜபக்ச எங்கள் ஜனாதிபதி என்றும் கொட்டும் மழையில் நனைந்தபடி அவர்கள் முழக்கமிட்டனர்.
Spread the love