சபரிமலை விவகாரத்தில் அப்பாவி மக்களை கைது செய்தால் பெரிய விலை கொடுக்க நேரிடும் என மாநில அரசுக்கு உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதன் பின்னர் மாதாந்திர பூஜைக்காக கடந்த வாரம் ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது.
இதன்போது 10 முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்களை அனுமதிப்பதை எதிர்த்து கோவில் வளாகத்தில் போராட்டம் மேற்கொள்ளப்பட்டமையினால் 10-க்கும் மேற்பட்ட பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். இந்த சம்பவத்தில் காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதனையடுதது .மாநிலம் முழுவதிலும் இருந்து இதுவரை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மேலும் 450-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.
இந்த நடவடிக்கைக்கு எதிராக கேரள நீதிமன்றில் தொடரப’பட்ட வழக்கில் சபரிமலை போராட்டத்தில் பங்கேற்றதாக கூறி அப்பாவி மக்களையும் காவல்துறையினர் கைது செய்துள்ளதாகவும் இந்த சட்டவிரோத கைது நடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனுவை நேற்று விசாரித்த உயர்நீதிமன்றம் மாநில அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்ததுடன் மாநில அரசு வெறும் விளம்பரத்துக்காக பணியாற்றக்கூடாது எனவும் சபரிமலை விவகாரத்தில் நேரடியாக தாக்குதலில் ஈடுபட்டவர்களை மட்டுமே கைது செய்ய வேண்டும் எனவும் அப்பாவிகளை கைது செய்தால் மிகப்பெரிய விலை கொடுக்க நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.