223
சிறுகதை, கவிதைகள், கட்டுரைகள் எனத் தொடர்ச்சியாக எழுதி வரும் ஈழத்து எழுத்தாளர் தமிழ்நதிக்கு சிறந்த எழுத்தாளருக்கான மகுடம் விருதை இந்தியாவின் நியூஸ் 18 தொலைக்காட்சி வழங்கியுள்ளது.
சிறுகதை, கவிதைகள், கட்டுரைகள் எனத் தொடர்ச்சியாக எழுதி வருபவர் ஈழத்து எழுத்தாளர் தமிழ்நதி. சிதிலமாக்கப்பட்ட ஒரு இனத்தின் மனிதத்தைப் பேசும் கதைகளைக் கொண்டது மாயக்குதிரை சிறுகதை மூலம் கவனிக்க வைத்துள்ளார். எழுத்தாளர் தமிழ்நதி. போர் சிதைத்த வாழ்க்கை, புகலிடத்தின் விரக்தி என ஒவ்வொரு கதையும் அழிக்கப்பட்ட ஒரு இனத்தின் வலியைப் பதிவு செய்திருப்பதாகவும் மகுடன் விருதுக் குறிப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
வலிமையான தனது எழுத்தின் மூலம் மனிதம் பேசியிருக்கிறார் தமிழ்நதி. ஈழத்தின் திருகோணமலையைப் பிறப்பிடமாகக் கொண்ட தமிழ்நதி, ஈழத்து பெண் எழுத்தாளர்களில் முக்கியமானவர். சிறுகதை, கவிதைகள், கட்டுரைகள் எனத் தொடர்ச்சியாக எழுதி வரும் தமிழ்நதி, அண்மையில் வெளியான மாயக்குதிரை சிறுகதை தொகுப்பு மூலம் அழுத்தமாக முத்திரை பதித்திருக்கிறார். இந்த ஆண்டின் மிக முக்கிய சிறுகதைத் தொகுப்பில் மாயக்குதிரைக்கு நிச்சயம் இடமுண்டு என்றும் விருதுக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love