Home இந்தியாடெல்லியின் முன்னாள் முதலமைச்சர் மதன் லால் குரானா காலமானார்

டெல்லியின் முன்னாள் முதலமைச்சர் மதன் லால் குரானா காலமானார்

by admin

பாரதிய ஜனதா கட்சியின் சிரேஸ்ட அரசியல் தலைவர்களில் ஒருவரும், டெல்லியில் முன்னாள் முதலமைச்சருமான மதன்லால் குரானா காலமானார். மதன்லால் குரானா 1936ஆம் ஆண்டு பிறந்தவர். 82 வயதான இவர், 1993-96 ஆகிய காலகட்டத்தில் டெல்லியின் முதலமைச்சராக பதவி வகித்துள்ளார்.

இந்து அமைப்பான ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தீவிர பிரச்சாகராக இருந்த மதன்லால் குரானா 2004-ம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலத்தில் ஆளுநராகவும் பதவி வகித்துள்ளார். வயது மூப்பினால் ஏற்படும் உடல்நலக்குறைபாடுகளால் பாதிக்கப்பட்டு வந்த மதன்லால் குரானா டெல்லியில் இன்று காலமானதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More