சிங்கப்பூரில் நடைபெற்ற முதல்தர வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்கும் பெண்கள் டென்னிஸ் சம்பியன்சிப் போட்டியில் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா கிண்ணத்தினைக் கைப்பற்றியுள்ளார். நேற்றையதினம் நடைபெற்ற இந்தத் தொடரின் இறுதிப் போட்டியில் எலினா ஸ்விடோலினா அமெரிக்காவின் ஸ்லோனே ஸ்டீபன்சுடன் போட்டியிட்டிருந்தார். 2 மணி 23 நிமிடங்கள் நடைபெற்ற இந்த போட்டியின் முடிவில் 24 வயதான ஸ்விடோலினா 3-6, 6-2, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று முதல்முறையாக கிண்ணத்தினை கைப்பற்றியுள்ளர்
46 ஆண்டுகால பெண்கள் டென்னிஸ் வரலாற்றில் உக்ரைன் வீராங்கனை ஒருவர் இந்தக் கிண்ணத்தினை வெல்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வெற்றியின் மூலம் ஸ்விடோலினா இன்று வெளியாகும் புதிய தரவரிசை பட்டியலில் 4-வது இடத்துக்கு முன்னேறும் அதேவேளை ருமேனியாவின் சிமோனா ஹாலெப் முதலிடத்தில் தொடருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.