காசா எல்லையில் இஸ்ரேல் நிகழ்த்திய வான்தாக்குதலில் 12 முதல் 14 வயதுக்கு உட்பட்ட 3 பலஸ்தீன சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காசா எல்லை பகுதியில் பல மாதங்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற பலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் படையினர் வன்முறையை கட்டவிழ்த்து விடுவதாகவும் பலஸ்தீனர்களை குறிவைத்து வான்வழி தாக்குதல்களை நடத்துவதாகவும் குற்றம் சுமத்தப்படுகின்றது.
அந்த வகையில், போராட்டம் ஆரம்பித்த நாள் முதல் தற்போது வரை 200-க்கும் மேற்பட்ட பலஸ்தீனர்கள் இஸ்ரேல் படையினரால் கொல்லப்பட்டு உள்ளனர். இந்த நிலையில், காசாவில் உள்ள கான் யூனிஸ் நகரில் இஸ்ரேல் போர் விமானம் மேற்கொண்ட தாக்குதலிலிலேயே 3 சிறுவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை பலஸ்தீன சிறுவர்கள் மூவரும் இஸ்ரேல் எல்லை பகுதியில் உள்ள வேலிக்கு அருகே வெடிகுண்டுகளை வைக்க முயன்றதாகவும், அதனால் அவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டு கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்து உள்ளமை குறிப்பிடத்தக்கது.