Home இலங்கைசபாநாயகர் கரு ஜயசூரிய தலமையில் கட்சித்தலைவர்கள் கூட்டம்…

சபாநாயகர் கரு ஜயசூரிய தலமையில் கட்சித்தலைவர்கள் கூட்டம்…

by admin

நாளை முற்பகல் 11 மணிக்கு நடைபெறவிருக்கின்ற கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்குமாறு சகல கட்சிகளின் தலைவர்களுக்கும் சபாநாயகர் கரு ஜயசூரிய அழைப்பு விடுத்துள்ளார்.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் மாற்ற சூழலில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிகளான தமது கோரிக்கைக்கு அமைய நாடாளுமன்றத்தை கூட்டுமாறு வலியுறுத்தி 126 நாடாளுமன்ற உறுப்பினர்கள்  கையொப்பமிட்ட கடிதம் ஒன்று சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் ஏற்கனவே  கையளிக்கப்பட்டுள்ளதாக, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார். இதில் ரணில் விக்கிரமசிங்க உட்பட 126பேர் இதில் கையொப்பமிட்டுள்ளனர். இதனையடுத்து நாளை முற்பகல்  நாடாளுமன்றத்தில் அவசர கட்சித் தலைவர்கள் கூட்டத்தை சபாநாயகர் கூட்டுவதற்கு தீர்மானித்துள்ளார். நாடாளுமன்றத்தை கூடுவது குறித்து இந்தக் கூட்டத்தில் தீவிர ஆலோசனை நடத்தப்படவுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More