Home இலங்கை யாழ்.பல்கலை தமிழமுதம் நிகழ்வுக்கு நிதியுதவி வழங்கியவர்கள் தொடர்பில் புலனாய்வாளர்கள் விசாரணை

யாழ்.பல்கலை தமிழமுதம் நிகழ்வுக்கு நிதியுதவி வழங்கியவர்கள் தொடர்பில் புலனாய்வாளர்கள் விசாரணை

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


யாழ்.பல்கலையில் நடைபெற்ற தமிழமுதம் நிகழ்வுக்கு நிதியுதவி வழங்கியவர்கள் தொடர்பில் புலனாய்வாளர்கள் விசாரணைகளை முன்னெடுத்து உள்ளதாக காவல் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த மாதம் யாழ்.பல்கலைகழக மாணவர்களால் தமிழமுதம் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு நிகழவுகள் நடைபெற்று முடிந்துள்ளன.

குறித்த நிகழ்வுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் , வெளிநாட்டில் வசிக்கும் நபர்கள் என பலரும் நிதியுதவி செய்ததாகவும் அதன் ஊடாக மாணவர்களுக்கு பெருந்தொகை பணம் கிடைக்க பெற்று உள்ளதாகவும் அதனால் நிதியுதவி வழங்கியவர்கள் தொடர்பிலும் , எவ்வளவு நிதியுதவி கிடைத்தது என்பது தொடர்பிலும் ஆராய்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More