உலகிலேயே மிக உயரமான சிலையான, சர்தார் வல்லபாய் படேல் சிலையை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்துள்ளார். இந்தியாவின் இரும்பு மனிதர் என அழைக்கப்படும் முதலாவது உள்துறை அமைச்சரான சர்தார் வல்லபாய் படேலுக்கு குஜராத் மாநிலத்தில் இவ்வாறு மிகப்பிரமாண்டமான சிலை அமைக்கப்பட்டு உள்ளது.
182 மீற்றர் உயரம் கொண்ட இந்த சிலை உலகிலேயே மிக உயரமான சிலையாக கருதப்படுகிறது. சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளையொட்டி, இந்த சிலையை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். இதேவேளை இந்த சிலையின் பிரம்மாண்ட திறப்பு விழாவுக்கு எதிராக போராடிய பழங்குடி மக்களை காவல்துறையினர் தடுத்து வைத்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சிலை திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதியை சேர்ந்த பழங்குடியினர் முழு கடை அடைப்புக்கு அறிவிப்பு விடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது