ஹங்கேரி – செர்பியா எல்லை வழியே, ஐரோப்பிய ஒன்றித்துக்குள் செல்ல முயன்ற அகதிகளை எட்டி உதைத்தமைக்காக கைது செய்யப்பட்டிருந்த ஒளிப்பதிவாளர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2015ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், பெட்ரா லாஸ்லோ என்ற குறித்த பெண் ஒளிப்பதிவாளர், அகதிகளை எட்டி உதைக்கும் காட்சியானது சமூக ஊடகத்தில் பரவியருந்த நிலையில் அவரது செயலுக்கு பல்வேறு தரப்புகளும் கண்டனங்களை வெளியிட்டிருந்தன. இதனையடுத்து கைது செய்யப்பட்ட அவருக்கு கீழ்நீதிமன்றம் மூன்றாண்டுகால நன்னடத்தை தண்டனை விதித்து உத்தரவிட்டு இருந்தது
இதனையடுத்து தொடர்ந்து நடைபெற்ற மேன்முறையீட்டு வழக்கில் ஹங்கேரி உச்ச நீதிமன்றம் அவரை விடுதலை செய்து தீர்ப்பு வழங்கியுள்ளது. பெட்ரோவின் செயல் எந்த குற்றங்களையும் விளைவிக்கவில்லை எனவும் அதனால், இதனை பாரிய குற்றமாக கருதமுடியாது எனவும் இது ஒரு தெரிவித்து உச்ச நீதிமன்றம் அவரை விடுதலை செய்துள்ளது. எனினும் அவரது செயல், ஒழுக்கம் தவறிய மற்றும் சட்டவிரோத செயல் எனவும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.