Home இலங்கைமகிந்தவுடன் இணைந்து செயற்படுமாறு, தமிழ் சமூகத்திடமும், தலைவர்களிடமும் சுவாமி கோரிக்கை

மகிந்தவுடன் இணைந்து செயற்படுமாறு, தமிழ் சமூகத்திடமும், தலைவர்களிடமும் சுவாமி கோரிக்கை

by admin

தமிழ் மக்களுடைய  பிரச்சினைகள் குறித்து,  பிரதமர்  மகிந்த ராஜபக்ஸவுடன் இணைந்து செயற்பட முயற்சிக்குமாறு பாரதீய ஜனதா கட்சியின் முக்கியஸ்த்தரும், அரசியல் சர்ச்சைகளை உருவாக்குபவருமான சுப்ரமணிய சுவாமி தனது ருவிட்டர் பக்கத்தில் பெதிவிட்டள்ளார்.  இந்த விடயத்தில் தமிழ் சமூகம் மற்றும் அதன்  மரியாதைக்குரிய சிரேஸ்ட தலைவர்கள், குறிப்பாக இரா  சம்பந்தன்  போன்றவர்கள், பிரதமர் மகிந்த ராஜபக்ஸவுடன் இணங்கிச் செல்ல வேண்டும் என தான் அவசர வேண்டுகோளை விடுப்பதாக தெரிவித்துள்ளார். இதேவேளை தேவை ஏற்பட்டால், சாதகமான தீர்வுக்காக மகிழ்ச்சியுடன் வேலை செய்யத் தயாராக இருப்பதாக சுப்ரமணிசுவாமி தனது ருவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

1 comment

Logeswaran November 1, 2018 - 3:45 pm

இது ஒரு வாய்ப்பாகக் கருதி சம்பந்தர் சுப்ரமணிய சுவாமியை இலங்கைக்கு வரவழைத்து அரசியலத் தீர்வு பற்றிக் கதைத்து அவரின் உதவியைப் பெற வேண்டும்

Comments are closed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More