பீமா-கோரேகான் குண்டு வெடிப்பிலும், மாவோயிஸ்ட்டுகளுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலும் கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட மனித உரிமைப் ஆர்வலர்கள் கௌதம் நவ்லகா, ஆனந்த் தெல்தும்பே ஆகியோரை நவம்பர் 21 வரை கைது செய்ய மும்பை உயர் நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.
கடந்த ஓகஸ்ட் 28 ஆம் திகதி பீமா-கோரேகான் வெடிகுண்டு சம்பவத்திலும், தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் இயக்கத்திலும் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட மனித உரிமை ஆர்வலர்களான சட்டத்தரணி சுதா பரத்வாஜ்,கவிஞர் வரவர ராவ்,கான்சால்வ்ஸ்,அருண் பெராரியா மற்றும் பத்திரிகையாளர் கௌதம் நவ்லகா ஆகியோர் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.
இவர்களில் கௌதம் நவ்லகா வீட்டுக்காவலில் இருந்து விடுவிக்கப்பட்ட போதும் கவிஞர் வரவர ராவ்வின் வீட்டுக்காவல் 3 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதுடன் ஏனையவர்கள் வீட்டுக்காவலில் இருந்து காவல்துறை காவலுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மும்பை உயர் நீதிமன்றம் நவ்லகாவையும் தெல்தும்பேவையும் வரும் நவம்பர் 21 ஆம் திகதிp வரை கைது செய்யத் தடை விதித்துள்ளது.