இன்னும் பத்து நாட்களுக்குள் இந்தியத் தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு மிகக் கொடுமையான அளவில் இருக்கும் என காற்று தர முன்னறிவிப்பு மற்றும் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கூளங்கள் எரிப்பதாலும், மோசமான வானிலை மாற்றங்களாலும், இன்று டெல்லியில் காற்று தர குறியீட்டு எண் மிக வேகமாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயல்களில் கூளங்களை எரித்த காரணத்தினால் உண்டான 2.5 மைக்ரோமீட்டருக்கும் குறைவான விட்டம் கொண்ட தூசுகளினால், காற்றில் 12 சதவிகித மாசுபாடு ஏற்பட்டுள்ளதெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வட இந்தியாவில் நிலவும் மேற்கத்திய இடையூறுகளால், கிழக்குப் பகுதியில் ஈரப்பதமும் புயலுக்கான அமைவும் ஏற்படுகிறது. இதனால் காற்றின் போக்கு மட்டுப்படுத்தப்படுகிறது எனவும் டெல்லி – என்சிஆர் பகுதிகளில் இன்னும் 10 நாட்களில் அதிகளவில் மாசுபாடு ஏற்படும் எனவும் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, டெல்லியில் காற்று மாசுபாட்டைத் தவிர்க்க தனியார் வாகனங்களைத் தடை செய்யும் யோசனை பரிந்துரைக்கப்பட்டதுடன் இன்று முதல் 10ஆம் திகதி வரை கட்டட வேலைகளை நிறுத்தி வைக்குமாறும் தெரிவித்துள்ளது.
மேலும் நிலக்கரி மற்றும் உயிர் எரிவாயுவைப் பயன்படுத்தும் ஆலைகளை நவம்பர் 4 முதல் நவம்பர் 10ஆம் திகதி வரை மூடுமாறும் தெரிவிக்க்பபட்டுள்ளது