குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தாக்குதல் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டிய அவசியமில்லை என ஊடகவியலாளர் ரொசான் குணசேகர தெரிவித்துள்ளார். கடந்த சனிக்கிழமை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் இடம்பெற்ற போராட்டமொன்று தொடர்பில் செய்தி சேகரிக்கச் சென்றிருந்த ஊடகவியலாளர் ரொசன் மீது கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரால் ரவீந்திர விஜேகுணவர்தன தாக்குதல் நடத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இந்த தாக்குதல் சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை நடத்தப்பட வேண்டிய அவசியமில்லை என ஊடகவியலாளர் குறிப்பிட்டுள்ளார். கடற்படைத் தளபதியை தமக்கோ அல்லது தம்மை கடற்படைத் தளபதிக்கோ தனிப்பட்ட ரீதியில் தெரியாது எனவும், இருவருக்கும் இடையில் தனிப்பட்ட குரோதமோ முன்விரோதமோ கிடையாது எனவும் குறிப்பிட்டுள்ள அவர் எதிர்கால பாதுகாப்பினை கருத்திற் கொண்டே தாம் இவ்வாறு முறைப்பாடு ஒன்றை செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
கடற்படைத் தளபதியிடமிருந்து நட்டஈடு எதனையும் பெற்றுக்கொள்ள விரும்பவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.