கொல்லப்பட்ட ஊடகவியலாளர் ஜமால் கசாக்கி ஒரு ஆபத்தான இஸ்லாமியவாதி என சவூதி இளவரசர் சல்மான் அமெரிக்காவிடம் தெரிவித்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. துருக்கியில் உள்ள சவூதி தூதரகத்தில் ஜமால் கொல்லப்பட்டதை சவூதி ஒப்புக் கொள்வதற்கு முன்னர் தொலைபேசி வாயிலாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பின் மருமகனான குலஷ்னரிடம் உரையாடிய சவூதி இளவரசர் ஜமால் ஆபத்தான இஸ்லாமியவாதி எனவும், அவர் முஸ்லிம் பிரதர்வுட் அமைப்பைச் சேர்ந்தவர் எனவும் தெரிவித்ததாக வோஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
ஜமால் கொலை விவகாரத்தில் அமெரிக்கா மற்றும் சவூதி இடையே உள்ள முரண்பாட்டினைத் தீர்ப்பதற்கு இந்த உரையாடலின் போது இளவரசர் முயன்றுள்ளதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எனினும் இந்தக் குற்றச்சாட்டை சவூதி திட்டவட்டமாக மறுத்துள்ளது.