குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் மாந்தை மேற்கு பிரதேசச் செயலக கலாச்சாரப் பேரவை மற்றும் கலாசார அதிகார சபை இணைந்து நடாத்திய ‘பிரதேச இலக்கிய விழா’ நேற்று (2) வெள்ளிக்கிழமை மாலை மன்-அடம்பன் மத்திய மகா வித்தியாலயத்தில் இடம் பெற்றது. இதன் போது பல்வேறு நிகழ்வுகள் இடம் பெற்றதோடு,தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு விருதுகளும் வழங்கி வைக்கப்பட்டது.
யேசுதாசன் சாரா நீராஜா(சித்திரக்கலை),சி.பெலிக்ஸ் ஜெனிவர் (சித்திரக்கலை),எ.டெலிஸ்ரன் நிஸாந்(மிருதங்க இசை) ஆகிய மூவருக்கும் இளம் கலைமதி விருது வழங்கி வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் சந்தியாப்பிள்ளை அருளானந்தம்(இசை,கீ போட்வாத்தியக்கலை), பெரியசாமி முத்துக்கருப்பன் (பாடல் எழுத்துருவாக்கம்) முஹமட் இமாம் ஹன்பர் (எழுத்தாளர்,இயற்துறை), வேலு சந்திரகலா (எமுத்தாளர்,பல்கலைகள்),கலாபூசணம் கிறிஸ்தோகு சந்தியோகு (மிருதங்க இசை) ஆகிய ஐவருக்கும் கலைமதி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது
மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் செல்லத்துறை கேதீஸ்வரன் தலைமையில் இடம் பெற்ற பிரதேச இலக்கிய விழா நிகழ்விற்கு பிரதம விருந்தினராக மன்னார் மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன், மற்றும் சிறப்பு விருந்தினர்களாக மடு வலயக் கல்விப்பணிப்பாளர் கே.சத்தியபாலன், மாவட்ட அபிவிருத்திச் சபையின் முன்னாள் தலைவர் பி.எம்.செபமாலை,மாந்தை மேற்கு பிரதேச சபையின் முன்னாள் உப தவிசாளர் எஸ்.சௌந்தர நாயகம்,ஓய்வு நிலை உதவிக் கல்விப்பணிப்பாளர் ஏ.அந்தோனி முத்து ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது