உங்கள் உதவி தேவையில்லை என ஜனாதிபதி சிறிசேன ஐ.நா. செயலாளர் நாயகம் அன்டனியோ குட்டாரஸிடம் தெரிவித்ததாக ‘தேசய’ என்ற சிங்கள வராந்தப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இந்த விடயம் வெளியே யாருக்கும் தெரியாத ரகசியம் என்றும் அப் பத்திரிகை தெரிவித்துள்ளது.
இதேவேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திடீரென ரணில் விக்கிரமசிங்கவைப் பதவி நீக்கிவிட்டு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவை புதிய பிரதமராக நியமித்து எடுத்த நடவடிக்கையை சிங்கள வாராந்தப் பத்திரிகைகள் பாராட்டியுள்ளன.
கொழும்பிலிருந்து வெளிவரும் பெரும்பாலான சிங்கள வாராந்தப்பத்திரிகைகள் ஜனாதிபதி மைத்திரியின் நடவடிக்கைகளை ஆதரித்து கருத்து வெளியிட்டுள்ளதுடன் வெளிநாட்டு சக்திகள் குறித்து அவதானமாக இருக்க வேண்டும் என்ற எச்சரிக்கைகளையும் விடுத்துள்ளன.
இதேவேளை, சிங்கள பௌத்த இனவாதப்பத்திரிகையாக கருதப்படும் திவயின பத்திரிகையின் வார இறுதி தலைப்புச்செய்தியில்’ மைத்திரியைப் படுகொலைசெய்ய விசேட குழு: ஆயுதங்களையும் கோரினர் ‘ என செய்தி வெளியிட்டுள்ளது.
3 comments
Wow at last our beloved his excellency slapped the UN head. Great ya. May God bless mother Sri Lanka.
22 நாடுகளின் உதவிகளை எடுத்து தமிழ் மக்களை அழிதார்கள். ஆனால் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்களை நிறைவேற்றி ஒரு அரசியல் தீர்வை தமிழர்களுக்கு வழங்காமல் ஐ.நா. வின் உதவி தேவை இல்லை என்கிறார் மைத்திரி. உரிமைகளை வென்று எடுக்க ஐ.நா. வின் உதவி தமிழர்களுக்குத் மிகவும் தேவையாக இருக்கின்றது.
ஸ்ரீலங்கா தமிழர்களை அடக்கி ஆளும் ஒரு நாடு, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்களை நிறைவேற்ற முடியாத தோல்வியடைந்த நாடு மற்றும் எல்லோரையும் ஏமாற்றும் கள்ள நாடு. இப்படிப்பட்ட ஸ்ரீ லங்காவை கடவுள் ஆசீர்வதிக்கமாட்டார். தமிழர்களின் ஆதரவுடன் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட மைத்திரியை நம்ப முடியாது என்று பலர் கூறுகின்றார்கள்.