Home உலகம்பாகிஸ்தானில் தலிபான்களின் தந்தை என அழைக்கப்பட்ட மதகுரு கொலை

பாகிஸ்தானில் தலிபான்களின் தந்தை என அழைக்கப்பட்ட மதகுரு கொலை

by admin


பாகிஸ்தானில் ராவல்பிண்டியின் மேற்கு பகுதியில், தலிபான்களின் தந்தை என அழைக்கப்பட்ட மதகுரு ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். மௌலானா சமி அல்-ஹக் எனப்படும் மதகுருவே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார் என அவரது குடும்பத்தினர் தெரிவித்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்ற போதும் அவர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் சில செய்திகள் தெரிவித்துள்ளன. எனினும் அவர் கொலை செய்யப்பட்டதற்கான காரணம் வெளியாகவில்லை.

மௌலானா சமி அல்-ஹக் தலைவராக இருந்த வடக்கு பாகிஸ்தானில் உள்ள ஹக்கானியா மசூதிப்பாடசாலையில்தான் தலிபான் அமைப்பை தோற்றுவித்த முல்லா அமர் உள்பட, தலிபான் அமைப்பின் பல உறுப்பினர்கள் கல்வி கற்றனம் எனத் தெரிவிக்கப்படுகின்றது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More