யாழில் சட்டவிரோதமாக போலி லேபலுடன் தயாரித்து விற்பனை செய்யப்பட்டு வந்த சுமார் 6 ஆயிரம் குடிநீர் போத்தல்களை யாழ்ப்பாணம் மாநகர சபையின் சுகாதாரப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர். யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியில் இயங்கிய விநியோக வர்த்தக நிலையத்தின் மீது நேற்றையதினம் சுகாதார உத்தியோகத்தர்கள் மேற்கொண்ட திடீர் சோதனையின்போது இவை கைப்பற்றப்பட்டுள்ளன.
இதன்போது குடிநீர்ப்போத்தல்கள் நிறுவன பதிவு இலக்கம் இன்றித் தயார் செய்யப்பட்ட நிலையில் ஓர் இலக்கமும் அதன் மேல் மற்றுமோர் போலி இலக்கமும் ஒட்டப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவற்றினை பறிமுதல் செய்து யாழ். மேலதிக நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தியதனையடுத்து நீதிமன்றம் பிரதான சந்தேக நபரிற்கு அழைப்பானை அனுப்புமாறும் அதுவரை சான்றுப்பொருட்கனை மன்றில் தடுத்துவைத்துள்ளது.
மேலும் மாவட்ட விநியோகஸ்தரான 2ம் எதிரியை 40 ஆயிரம் ரூபா சரீரப் பிணையில் செல்ல அனுமதித்து வழக்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் 7 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது