கடந்த சில நாட்களின் முன்னர் ஐக்கிய தேசியக் கட்சியினர் தமக்குள்ள மக்கள் பலத்தை காண்பிக்க மாபெரும் பேரணி நடாத்தியிருந்தனர். இதனைப் போன்றதே தமக்குள்ள மக்கள் பலத்தை காண்பிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் புதிய பிரதமர் மகிந்த ராஜபக்சவும் பேரணி ஒன்றில் பங்குபற்றுகின்றனர்.
பொதுஜன பெரமுன ஏற்பாடு செய்துள்ள இப் பேரணி நாளை மதியம் பாராளுமன்ற வளாகத்தில் ஆரம்பிக்கவுள்ளது. மகிந்த ராஜபக்ச – மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்திற்கு ஆதரவு கோரவும் ஒற்றுமையினை வெளிப்படுத்தவும் இப் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கூறுகின்றது.
அத்துடன் இதன்போது எவரும் அசௌகரியங்கள் ஏற்படுத்தப்பட மாட்டாது என்றும் ஆட்சி மாற்றத்தின் மகிழ்வினை வெளிப்படுத்தும் வகையிலேயே ஆதரவாளர்கள் ஒன்றுகூட்டப்படுவதாகவும் பொதுஜன பெரமுன குறிப்பிட்டிருந்தது.
கடந்த செப்டம்பர் மாதம் மகிந்த ராஜபக்ச தலைமயில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஏற்பாடு செய்திருந்த பேரணியில் கலந்துகொ ண்டவர்கள் மதுபோதையில் பொதுமக்களுக்கும் சொத்துக்களுக்கும் சேதம் விளைவித்தமை கடும் விமர்சனங்களை தோற்றுவித்தமை குறிப்பிடத்தக்கது.