பாராளுமன்றத்தை அண்மித்துள்ள பொல்துவ பகுதியில் இன்று நடைபெறவுள்ள விசேட கூட்டம் காரணமாக விசேட பாதுகாப்பு மற்றும் வாகன போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் காவல்துறை ஊடகப் பேச்சாளரும் காவல்துறை அத்தியகட்சருமான ருவான் குணசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த கூட்டத்திற்கு பெரும் எண்ணிக்கையிலானோர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதனால் 1200 காவல்துறையினர்; பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் பொதுமக்களுக்கு முழுமையான பாதுகாப்பை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுன ஏற்பாடு செய்துள்ள இந்த விசேட கூட்டத்தில் புதிய பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கலந்து கொள்ளவுதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது