159
தீபாவளி விசேட பூசை இன்று செவ்வாய்க்கிழமை(6) மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயத்தில் இடம் பெற்றது. திருக்கேதீஸ்வரம் ஆலய பிரதம குரு கருனாநந்த குருக்கள் தலைமையில் இன்று காலை 7.45 மணியளவில் இடம் பெற்றது. இதன் போது நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர். இதே வேளை மன்னார் மாவட்டத்தில் உள்ள பல்வேறு இந்து ஆலயங்களிலும் தீபாவளி பூசை இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
Spread the love