சட்டசபை தேர்தலை எதிர்நோக்கியுள்ள சத்தீஸ்கர் மாநிலத்தில் சிறப்பு படையினரால் தேடப்பட்டு வந்தவர்களில் 62 நக்சலைட்டுகள் இன்று ஆயுதங்களுடன் காவற்துறையினரிடம் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயுதப் புரட்சியின்மூலம் தமது கோரிக்கைகளை அடைத்ந்த விட முடியும் எனக் கருதும் இவர்கள் சத்தீஸ்கர், ஒடிசா, ஆந்திரா, மணிப்பூர் உள்ளிட்ட சில மாநிலங்களில் உள்ள காடு, மலைகளில் பதுங்கி வாழ்ந்து வருகின்றனர்.
இவர்களை கைதுசெய்வதற்கும், அழிப்பதற்கும் காவற்துறையின் தனிப்படையினர் தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வகையில், சத்தீஸ்கர் மாநில சட்டசபைக்கு எதிர்வரும் 12ஆம், 20ஆம் திகதிகளில் நடைபெறும் தேர்தலை சீர்குலைக்கும் நடவடிக்கைளில் இவர்கள் ஈடுபடவுள்ளதாக கடைத்த தகவலினையடுத்து அதனை தடுக்கும் வகையில் மாநிலம் முழுவதும் சிறப்பு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது
இந்நிலையில், இங்கு முதல்கட்ட தேர்தலை சந்திக்கவுள்ள பஸ்ட்டார், நாராயணப்பூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 62 நக்சலைட்டுகள் இன்று ஆயுதங்களுடன் காவற்துறையிடம் ஒப்படைத்து சரணாகதி அடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.