காலியில் இன்று ஆரம்பமான இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் போது இங்கிலாந்து அணித் தலைவர் ஜோ ரூட்டின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் இலங்கையின் சிரேஸ்ட இடது கை சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத் சாதனை படைத்துள்ளார்.
ரங்கன ஹேரத்தின் இறுதிப் போட்டி இது என்னும் நிலையில் இன்னிங்சின் 17வது ஒவரில் ரங்கன ஹேரத் வீசிய போது ஜோ ரூட்டின் விக்கெட் வீழ்த்தப்பட்டது. இந்த விக்கெட்டானது ரங்கன ஹேரத் காலி மைதானத்தில் கைப்பற்;றும் 100வது விக்கெட் என்ற சாதனைக்குரியதாக காணப்படுகின்றது.
முத்தையா முரளிதரன் 3 மைதானங்களில் 100 விக்கெட்டுகளுக்கு மேல் கைப்பற்றியுள்ளதுடன் ஜேம்ஸ் அண்டர்சன் லார்ட்ஸ் மைதானத்தில் 100 விக்கெட்டுகளைக் கைப்பற்றி சாதனை புரிந்திருந்தார். அந்த வகையில் ஒரே மைதானத்தில் 100 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய 3வது சர்வதேச வீரர் ரங்கனா ஹெராத் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது
முதல் நாள் போட்டியின் முடிவில் இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 321 ஓட்டங்களை எடுத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.