தென்னெபிரிக்காவுடனான டெஸ்ட் போட்டியின் போது பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் ஒருவருட தடை விதிக்கப்பட்ட முன்னாள் அணித்;தலைவர் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர், பான்கிராப்ட் ஆகியோர் மீதான தடையை ரத்து செய்வது தொடர்பில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் கட்டுப்பாட்டுசபை தீவிரமாக பரிசீலனை செய்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் மீதான தடை இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்குள் நீக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. வார்னர், ஸ்மித் இருவரும் தங்களுக்கு விதிக்கப்பட்ட தடையில் 8 மாதங்கள் முடிந்து விட்டதுடன் பான்கிராப்டுக்கு இந்த மாதத்துடன் முடிவடைகின்றது.
இந்நிலையில், முக்கிய துடுப்பாட்டவீரர்களான ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் ஆகியேரை அணிக்குள் சேர்க்க வேண்டும் எனவும் தடையை நீக்க வேண்டும் எனவும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களின் கூட்டமைப்பு அவுஸ்திரேலிய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபைக்கு அழுத்தம் கொடுத்து வருவதனையடுத்து இவ்வாறு தடையை ரத்து செய்வது தொடர்பில் பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது