Home இலங்கை14ஆம் திகதி பெரும்பான்மையை நிரூபிக்கத் தேவையில்லை – MY3 + MRன் முடிவு…

14ஆம் திகதி பெரும்பான்மையை நிரூபிக்கத் தேவையில்லை – MY3 + MRன் முடிவு…

by admin

கொள்கைப் பிரகடனத்தின் பின் ஒருநாள் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்படும்…

 
எதிர்வரும் 14ம் திகதி சட்டரீதியாக கூடவுள்ள நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியினால் புதிய கொள்கைப் பிரகடணம் வாசிக்கப்பட உள்ளதாகவும், அதன்பின்னர் பாராளுமன்றம் ஒரு நாளைக்கு பிற்போடப்பட உள்ளதாகவும் வழங்கியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.  இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர்,  14ம் திகதி கூடவுள்ள பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிருபிக்க தேவையில்லை என்றும், அன்றைய தினம் பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை தாக்கல் செய்ய முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ ஆகியொர் ஆலோசனை வழங்கியுள்ளதாக தெரிவித்த லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, மாகாண சபைத் தேர்தலை புதிய முறைப்படி முடியாவிட்டால் பழைய முறைப்படியாவது நடத்துவதற்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆலோசனை வழங்கியதாக அவர் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More