சர்வதேச கிரிக்கெட் சபையின் ஆறாவது பெண்களுக்கான உலக இருபதுக்கு 20 தொடர், மேற்கிந்தியத் தீவுகளின் கயானாவில் இன்று ஆரம்பமாகின்றது. அந்தவகையில் இன்றையதினம் முதலாவதாக இந்திய மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான குழு பி போட்டி நடைபெறவுள்ளது.
இத்தொடரில், அவுஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள், தென்னாபிரிக்கா, இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ், அயர்லாந்து ஆகிய 10 அணிகள் பங்கேற்கின்றன.
இதில், போட்டியை நடாத்தும் மேற்கிந்தியத் தீவுகளுடன், அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாபிரிக்கா, இலங்கை ஆகியன இத்தொடருக்கு நேரடியாகத் தகுதிபெற்றதோடு, தகுதிகாண் போட்டிகளில் முதலாமிடத்தை, இரண்டாமிடத்தை பெற்றதன் மூலம் பங்களாதேசும் அயர்லாந்தும் தகுதிபெற்றுள்ளன.
இதுவரையில் நடைபெற்ற ஐந்து தொடர்களில், மூன்று தடவைகள் அவுஸ்திரேலியாவும் இங்கிலாந்தும் மேற்கிந்தியத் தீவுகளும் தலா ஒவ்வொரு தடவைகள் சம்பியன் கிண்ணத்தினைக் கைப்பற்றியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது