அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவில் வேகமாக பரவிவரும் காட்டுத்தீ காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். காம்ப் கிரீக் என்ற இடத்தில் ஆரம்பமான இந்த காட்டுத்தீயானது கொளுந்து விட்டு எரிவவதாகவும் மணிக்கு 50 மைல் வேகத்தில் பலத்த காற்று வீசுவதால் சில மணி நேரத்திலேயே பல ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் காட்டுத்தீ பரவி விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் பல வீடுகள் தீக்கிரையாகி விட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்ற நிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல தொடங்கி உள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாடசாலைகள் மருத்துவமனைகளில் இருந்தவர்கள் எல்லாரும் வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் அதேவேளை இந்த காட்டுத்தீயில் சிக்கி சிலர் உயிரிழந்துள்ளதாகவும் உறுதிபடுத்தப்படாத தகவல்கள் கூறுகின்றன.
மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதால் சாக்ரமண்டோ நகருக்கு வடக்கேயுள்ள பகுதிகளில் பல்லாயிரக்கணக்கானோர் மின்சாரம் இன்றி இருளில் தவிக்கின்றனர் எனவும் தீயை அணைப்பதற்கு நூற்றுக்கணக்கான வீரர்கள் போராடி வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது