தேர்தல் மூலம் பெற்றுக்கொண்ட பெரும்பான்மையையும் இதுவரை நாட்டில் நிலவிவந்த அரசியல் சம்பிரதாயங்களையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுக்கு நூறாக்கியுள்ளார் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி நேற்றிரவு பாராளுமன்றை கலைத்து பொதுத்தேர்தலை அறிவித்ததை தொடர்ந்து சகோதர மொழி வானொலிச் சேவை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதியின் இந்த செயற்பாடானது இலங்கையின் அரசியலமைப்பிற்கு முற்றிலும் முரணானது எனவும் இதற்கு எதிராக தாம் சட்ட நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கும் தமிழ் முற்போக்கு கூட்டணி தயாராகவேயுள்ளது எனவும் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.