Home இலங்கைஜனாதிபதியின் செயற்பாடுகளுக்கெதிராக மன்னாரில் ஆர்ப்பாட்டம்

ஜனாதிபதியின் செயற்பாடுகளுக்கெதிராக மன்னாரில் ஆர்ப்பாட்டம்

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

வடக்கு கிழக்கு மக்களின் ஆதரவுடன் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட மைத்திரிபால சிரிசேனவின் அண்மைக் கால செயற்பாடுகள், ஜனநாயக விரோத செயற்பாடுகளாக காணப்படுவதாகவும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ரணில் விக்கிரம சிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கியது மட்டும் அல்லாமல் தொடர்ச்சியாக ஜனநாயக விரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்து இன்று காலை 10 மணியளவில் மன்னார் மாவட்ட செயலகத்துக்கு முன் கவனயீர்ப்பு போராட்டம் இடம் பெற்றது.

மன்னார் மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியின் ஏற்பாட்டில் இடம் பெற்ற குறித்த பேரணியில் ஐக்கிய தேசிய கட்சியின் வன்னி முகாமையாளர் ஜேம்ஸ் ப்ரிமிளஸ் மற்றும் மன்னார் மாவட்ட அமைப்பாளர் அப்துல் சமியு முஹமது பஸ்மி மற்றும் கட்சி முக்கியஸ்தர்கள் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீண்டும் குடும்ப ஆட்சி வேண்டாம் , ரணிலை ஜனாதிபதி ஆக்குவோம், சஜித்தை பிரதமராக்குவோம் , மைத்திரியே உன் அரசியல் அதிரடி எல்லாம் இராத்திரியே, ஜனநாயக விரோத செயற்;பாடுகளை உடனே நிறுத்து என பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பல்வேறு பததைகளை எந்தியவாறு போரட்டத்தில் ஈடுபட்டனர்.

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More