இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தனது நடவடிக்கைகளின் மூலம் அமெரிக்கா வழங்கும் உதவிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றார் என அமெரிக்காவின் சனப்பிரதிநிதிகள் சபையின் வெளிவிவகார குழுவின் தலைவராக உள்ள எலியட் ஏஞ்சல் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபையின் மூன்று பிரதிநிதிகளின் கையெழுத்துடன் எலியட் ஏஞ்சல் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடித்தத்லேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் நாட்டின் பாராளுமன்றத்தை கலைத்து பிரதமரை அரசியலமைப்புக்கு முரணான விதத்தில் நீக்கிய நடவடிக்கை குறித்து ஆழ்ந்த கவலையடைந்துள்ளதாகவும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது
மேலும் பாராளுமன்றத்தை உடனடியாக கூட்டி தற்போதைய நெருக்கடிக்கு ஜனநாயக வழிமுறைகள்ஊடாக தீர்வை காணுமாறும் கேட்டுக்கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்
அத்துடன் 2015 இல் மைத்திரி தெரிவு செய்யப்பட்டமையானது இலங்கையில் ஜனநாயக சீர்திருத்தம் பொறுப்புக்கூறப்படுதல் மற்றும் நல்லிணக்கம் குறித்த புதிய நம்பிக்கைகளை ஏற்படுத்தியிருந்தன எனவும் இதன் காரணமாகவே அமெரிக்கா இலங்கையுடன் முதலீடு செய்வதற்கான பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும் துரதிஸ்டவசமாக தற்போதைய நடவடிக்கைகள் சரிசெய்யப்படாவிட்டால் உங்கள் நாட்டின் ஜனநாயக அபிவிருத்தி மற்றும் ஏற்பட்ட முன்னேற்றங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என நாங்கள் அச்சமடைந்துள்ளோம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையானது இலங்கையில் அண்மையில் இடம்பெற்றுள்ள விடயங்கள் எம்சிசி திட்டத்திற்கும் அமெரிக்காவின் வெளிநாட்டு உதவிக்கும் அமெரிக்காவின் ஏனைய திட்டங்கள் மற்றும் ஈடுபாடுகளிற்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.