வழங்கப்படாத அதிகாரத்தின் மூலம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தை கலைத்துள்ளதாக தெரிவித்துள்ள மக்கள் விடுதலை முன்னணி பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக நீதிமன்றம் செல்ல எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.
கொழும்பில் அக் கட்சி நடாத்திய ஊடக மாநாட்டில் கட்சியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்கா இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆரம்பம் முதலே அரசியலமைப்பை மீறி வருவதாகவும் குற்றம் சுமத்திய அனுர தேர்தலில் அவரது அரச அதிகாரத்தை உச்ச அளவில் பயன்படுத்தும் நோக்கிலேயே அமைச்சரவை செல்லுபடியாகும் என கூறியுள்ளதாகவும் ;டிக்காட்டினார்.
அரசியலமைப்பில் ஜனாதிபதிக்கு வழங்கப்படாத அதிகாரத்தின் மூலம் பாராளுமன்றத்தை மைத்திரிபால சிறிசேன கலைத்துள்ளதாக கூறிய அவர் இது முற்றாக அரசியலமைப்புக்கு விரோதமானது என்றும் மேலும் தெரிவித்தார்.