கடந்த ஞாயிற்றுக் கிழமை இரவு (11.11.2018) விசுவமடு குமாரபுரம் பகுதியில் வசித்துவரும் 29 அகவையுடைய மரிய ஜெபசேன் விஜிதன் என்ற முன்னாள் போராளி திடீர் மரணத்திற்கு உள்ளாகியுள்ளார்.
புன்னை நீராவியில் வசித்து வந்த இளம் குடும்பஸ்தரான முன்னாள்போராளி மரிய ஜெபசேன் விஜிதன் மூன்று ஆண்டுகள் புனர்வாழ்வு பெற்று நிலையில் குடும்பத்துடன் இணைந்து வாழ்ந்து வந்துள்ளார். இவருக்கு ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்ற நிலையில் பெண் குழந்தை ஒன்றும் உள்ளது.
இன்று முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் பிரோத பரிசோதனை இடம்பெற்றபோதும் இவரது மரணத்திற்கான காரணம் கண்டறியப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.