நீதிமன்றத்தில் இன்று வழங்கப்பட்ட இடைக்கால தடையுத்தரவுக்கு அமைய எதிர்வரும் டிசம்பர் மாதம் 7ஆம் திகதி வரை பாராளுமன்றத் தேர்தல் செயற்பாடுகளை நிறுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாராளுமன்றத்தை கலைத்து மீண்டும் பொதுத் தேர்தலை நடத்தும் ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு எதிர்வரும் 07ஆம் திகதிவரை இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையிலேயே நீதிமன்றம் தேர்தல்கள் திணைக்களத்திற்கு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
இதற்கமைய நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் மற்றும் தேர்தல் முன்னாயத்த நடவடிக்கைகளை தேர்தல்கள் ஆணைக்குழு முன்னெடுப்பதற்கும் இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.