ஏமனில் தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்றுவரும் உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டு வருமாறு பிரித்தானியா சவூதி அரேபியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. சவூதி அரேபியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரித்தானியவெளியுறவு செயலாளர் ஜெரமி ஹண்ட் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
உள் நாட்டு போரின் காரணமாக ஏமனில் மனித உயிர்களின் இழப்பு கணக்கெடுக்க முடியாதது எனவும் பல லட்சக்கணக்கான மக்கள் ஏமனிலிருந்து எனைய நாடுளில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளார்கள் எனவும் சுட்டிக்காட்டியுள்ள ஜெரமி ஹண்ட் ஏமன் அரசு ஆயுதங்களை ஒருப்பக்கம் வைத்து விட்டு அமைதியை தேட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
சவூதியில் நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரில் அரச ஆதரவு படைக்கு ஆதரவாக சவூதி அரேபியாவும் ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு ஆதரவாக ஈரானும் செயற்பட்டு வருகின்றன. ஏமனில் நடக்கும் உள் நாட்டுப் போரில் 5,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்திருக்கலாம் எனவும் பல லட்சக்கணக்கான குழந்தைகள் பசி மற்றும் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளன எனவும் ஐ.நா சில மாதங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது