ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் அமைத்தவுடன் தமிழர் பிரச்சினைக்கான நிரந்தர தீர்வு பெற்றுத்தரப்படும் என ஐக்கியதேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க எதிர்க்கட்சித்தலைவர் இரா சம்பந்தனுக்கு வாக்குறுதி கொடுத்துள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் ரணில் விக்கிரமசிங்கவுக்குமிடையில் அலரிமாளிகையில் இன்று இடம்பெற்ற சந்திப்பின் போதே ரணில் இவ்வாறு வாக்குறுதியளித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சிக்கும் அதன் தலைமைத்துவத்துக்கும் நெருக்கடிகள் ஏற்படும் நேரங்களில் தாம் ஆதரவை தெரிவிக்கின்றோம் எனினும் அதற்குப் பலனாக தமிழ் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் எப்போது நிறைவேற்றப்படும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கேள்வி எழுப்பியுள்ள நிலையில் அதற்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பின் போது இரா.சம்பந்தன் தலைமையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 13 பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர். எனினும் பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் மட்டும் குறித்த கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.