நான்கு நாட்களுக்கு ஒரு பத்திரிகையாளர் கொல்லப்படுவதாகச் யுனெஸ்கோவினால் அண்மையில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2006 முதல் 2017 வரையான காலப்பகுதியில் உலகம் முழுவதும் பதிவான 1,010 கொலை வழக்குகளில் 89 வீதமானவே இன்னும் நிலுவையிலேயே இருக்கின்றன எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும் பெரும்பாலான குற்றவாளிகள் தண்டனை இல்லாமல் விடுவிக்கப்படுகிறார்கள் எனவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும் இந்தியாவில் இந்த வருடம் மட்டும் 7 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்; என்கின்ற நிலையில் பத்திரிகையாளர்கள் கொலைகளை இந்தியாவும் மெக்ஸிகோவும் மெத்தனமாகக் கையாள்கின்றன என வியன்னாவில் அமைந்துள்ள சர்வதேசப் பத்திரிகை நிறுவனம் தெரிவித்துள்ளது