புலிப் பயங்கர வாதம் என உச்சரித்த வாய்கள் அரச பயங்கரவாதம் என உச்சரிக்கத் தொடங்கியுள்ளன….
அரச பயங்கரவாதத்திற்கும் ஜனநாயகத்திற்கும் இடையிலேயே இன்று பாராளுமன்றத்தில் ஒரு போராட்டம் இடம்பெற்றது, இதில் ஜனநாயகம் வெற்றிபெற்றுள்ளது என ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித்தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அரச அதிகாரத்தை பாராளுமன்றத்தில் மோசமாக பயன்படுத்தும் இவர்கள் தேர்தலில் எவ்வாறு நடந்துகொள்வார்கள் என்பதை மக்கள் உணர்ந்திருப்பார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.
பாரளுமன்றத்தில் ஏற்பட்ட கடும் சர்ச்சைக்கு பினனர் ஐக்கிய தேசிய முன்னணியினால் பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
குறிப்பாக தமது தோல்வியை அறிந்திருந்த குழுவினர் இன்று அடக்குமுறையில் ஈடுபட்டனர். இன்று பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இன்மையால் ஆளும் தரப்பு உறுப்பினர்கள் ஆவேசத்துடன் செயற்படுவதாக அவர் கூறியுள்ளார். பாராளுமன்றத்திற்குள் ஜனநாயத்திற்கு ஜனாதிபதி இடமளித்துள்ளதை காண முடிந்துள்ளதாகவும், நேற்று ஜனாதிபதியால் வௌியிடப்பட்ட அறிக்கை மூலம் இந்த விடயம் தௌிவாகின்றது என்றும் அவர் கூறியுள்ளார்.
இன்றைய தினம் முக்கிய சவாலை வெற்றி கொண்டதாகவும், தனக்கு இன்றும் நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க என்றும் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ கூறியுள்ளார். இந்த நிலையில் இன்றைய நிலைமைகளை அரச தலைவர் அவதானித்திருப்பார். அதன்படி பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடி ஜனாதிபதி உரிய தீர்மானத்தை எடுப்பாரென நம்புகின்றோம் எனவும் இதன்போது குறிப்பிட்டார்.