காரின் பின் பெட்டியினுள் தன் குழந்தையை 23 மாதங்கள் மறைத்து வைத்திருந்த பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பெண் ஒருவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ரோசா மரியா டி க்ரூஸ் என்ற குறித்த பெண், தன் மகள் செரீனாவை, ஒரு பயன்படுத்தப்படாத அறையினுள் கார் ஒன்றுக்குள் இரண்டு ஆண்டுகள் மறைத்து வைத்திருந்துள்ளார். அவர் தன் கணவர் மற்றும் 3 குழந்தைகளிடம் இருந்து செரீனாவை மறைப்பதற்காக இவ்வாறு செய்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
காரினுள் இருந்து மீட்கப்பட்ட செரீனாவுக்கு தற்போது 7 வயதாகும் நிலையில் உணர்ச்சி இழந்தும் பலவீனமாகவும் ஆட்டிஸத்துக்கான குணங்களோடும் காணப்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில் கைது செய்யப்பட்ட செரீனாவின் தாய்க்கு அந்நாட்டு நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது