மக்கள் பிரதிநிதிகளான பாராளுமன்ற உறுப்பினர்களின் அண்மைக்காலச் செயற்பாட்டினால் நாட்டுக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். மக்கள் ஆணையால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகள் இவ்வாறு நடந்து கொள்ளுவது அருவருக்கத் தக்க செயல் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கைப் பாராளுமன்றத்தில் ஏற்பட்டுள்ள களபரங்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்றத்தில் அண்மைகாலமாக இடம்பெறுகின்ற செயற்பாடுகள் அனைத்தும் மிகவும் வெறுக்கத்தக்க செயல்கள் எனக்கு குறிப்பிட்டுள்ள அவர் இச்செயற்பாடுகளால் நாட்டிற்கு பாரிய அபகீர்த்தி ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அரசியலமைப்புக்கு அமைய ஜனநாயகத்தை பாதுகாக்கும் வகையில் தமது செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம் எனவும் ரோஹன ஹெட்டியாராச்சி மேலும் வலியுறுத்தியுள்ளார்.