இன்று மாலை 5 மணிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவுக்கும் அனைத்து கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்களுக்கும் இடையில் இடம்பெறவுள்ள கலந்துரையாடலில்; தாங்கள் பங்கேற்க போவதில்லை என ஜே.வி.பி அறிவித்துள்ளது.
நேற்றையதினம் அனைத்து கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்களுக்கு பாராளுமன்றத்தில் கடந்த சில நாட்களாக இடம்பெற்ற அரசியல் அமைதியின்மை மற்றும் குழப்ப நிலையை முடிவுக்கு கொண்டுவந்து பாராளுமன்ற நடவடிக்கைகளை சிறப்பாக முன்னெடுப்பதற்கு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் இடையில் உடன்பாடொன்றை ஏற்படுத்தும் நோக்குடன் ஜனாதிபதி கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
இந்நிலையிலேயே, அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க குறித்த கலந்துஐரயாடலில் தாங்கள் பங்கேற்க போவதில்லை என தெரிவித்துள்ளார்.